தீவிரவாத தாக்குதல்-மணிப்பூர் முதல்வர் தப்பினார்
இம்பால்: மணிப்பூர் மாநில முதல்வர் ஓக்ராம் சிங்கின் வீடு மீது தீவிரவாதிகள் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் நேற்றிரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் முதல்வர் தப்பினார்.
மணிப்பூரில் முதல்வர் ஓக்ராம் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது வீட்டின் மீது பயங்கரவாதிகள் நேற்று இரவு 9 மணியளவில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அப்போது முதல்வரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த தாக்குதலில் சுற்றுச்சுவர் மற்றும் முதல்வர் வீட்டு வளாகத்தில் உள்ள சிறிய கோயில் சேதமடைந்தன.
மக்கள் புரட்சிகர கட்சி என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இம்பால் நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் சிங்கை கொலை செய்வதற்காக கடந்த 2003 மற்றும் 2006ம் ஆண்டுகளில் பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications