சென்னையில் ரிலையன்ஸின் பிரமாண்ட காலணி ஸ்டோர்!
சென்னை: இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், காலணிகளுக்கு என்று தனி ஸ்டோரை சுமார் 6,000 சதுர அடிபரப்பளவில் சென்னையில் ஆரம்பித்துள்ளது.
சில்லறை மார்க்கெட்டிங் துறையில் கிடுகிடு வளர்ச்சியைக் கண்டுள்ள இந்நிறுவனம், ஏற்கெனவே டெல்லி, மும்பை, பெங்களூரு, மங்களூர், ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் காலணி கடைகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இப்போதுதான் முதன்முதலாக ரிலையன்ஸ் காலணி கடையைத் திறந்துள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்பாக்கம் மெயின் ரோட்டில் 'ரிலையன்ஸ் ஃபுட் பிரிண்ட்' என்ற பேரில் இந்தக் கடை தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு காலணிகள் கைப் பைகள், பெல்ட்டுகள் என்று 20,000 மேலான பொருட்கள் உள்ளன. 50க்கும் மேலான பிராண்டுகளில் காலணிகள் விற்பனைக்கு உள்ளன.
இந்தியத் தயாரிப்புகள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலணிகளும் விற்கப்படுகின்றன.
ஆண்களுக்கு பக்காரு, பிராங்கோ, லி ஒன், ரெப்டேப், பிளார்ஷிம் மற்றும் பெண்களுக்கு கிட்டன்ஸ், லில்லிபுட், கிராஸ் ஜி அண்ட்டி ஆகியவையும் ரிலையன்ஸின் சொந்தத் தயாரிப்பான மாண்சினி, டொஸ்கோ, லிலியனாவும் கிடைக்கும்.
ரூ.300 முதல் ரூ.5,000 வரை போகிறது, காலணிகளின் விலை. கடை திறப்பு விழா சலுகையாக ரூபாய் ஆயிரத்துக்கும் அதிகமான காலணிகள் வாங்கினால் 15% சிறப்புத் தள்ளுபடியும் உண்டு.
விளையாட்டு வீரர்களுக்கான எந்த்யாசிஸ்ட், பள்ளிக் குழந்தைகளுக்கான பிட்டர் பேட்டர், வீட்டில் பயன்படுத்தும் ப்ரிஸ் பீ காலணி வகைகளும் விற்பனையில் உள்ளன.
சென்னையில் மேலும் முக்கியமான இடங்களில் ரிலையன்ஸ் காலணி கடைகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் இதுபோன்ற கடைகள் தொடங்கப்படுமாம்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications