மனைவி இறந்த துக்கம்-கணவன் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பட்டுக்கோட்டை: மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை அருகே நடந்தது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள பழவேரிக்காடை என்ற ஊரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (35). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தட்சிணாமூர்த்தி உழன்று கொண்டிருந்தார். வேலைக்கும் செல்லாமல் மனைவி நினைவாக வீட்டிலேயே இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார் தட்சிணாமூர்த்தி. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தட்சிணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+