'அரவாணி' நிலையில் கம்யூ. கட்சிகள்-எம்பி புலம்பல்!
தென்காசி: ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரவாணி போல உள்ளனர் என்று தென்காசி எம்.பி. அப்பாத்துரை கூறியுள்ளார்.
தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலவில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரத்த சேமிப்பு வங்கி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
எம்.பி. அப்பாத்துரை தலைமை வகித்து, ரத்த சேமிப்பு வங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், தென்காசி அரசு மருத்துவமனையில் மொத்தம் 14 மருத்துவர்கள்தான் உள்ளனர். அவர்களில் பலர் விடுமுறையில் சென்று விடுகின்றனர்.
எஞ்சிய மருத்துவர்களை வைத்து தான் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் 2000க்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஒரு பிளம்பரோ, எலக்ட்ரீஷியனோ கிடையாது. சுகாதார துறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமசந்திரனிடம் இது பற்றி எடுத்துக் கூறினேன். அவரிடம் சண்டையும் போட்டேன். விளைவு மருத்துவமனையில் பணியாற்றிய எனது டாக்டர் நண்பரை சஸ்பெண்ட் செய்து விட்டனர். அதன் பிறகு அவர் மனம் வெறுத்து வேலையை விட்டே நின்றுவிட்டார்.
விரைவில் தென்காசி மாவட்டம் தலைநகரமாக மாறும். இங்கு மருத்துவ கல்லூரி அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு தேவையான இடமும் தென்காசியில் உள்ளது. ஐந்து ஆண்டுகாலம் எம்பியாக இருந்திருக்கிறேன்.
அரசுகளிடம் குறைகளை எடுத்து சொல்லி எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போது ஆளும் கட்சியாகவும், இல்லாமல் எதிர்கட்சியாகவும் இல்லாமல் அரவாணியை போல இருக்கின்றோம். வளர்ச்சி பணிகளை செய்து தாருங்கள் என கேட்கதான் முடியும். செய்து கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை என்றார் அவர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications