கஞ்சா கடத்தல்காரரை பிச்சைக்காரர் சட்டத்தில் கைது செய்த எஸ்.ஐ
சென்னை: கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டவர் மீது வழக்கு தொடராமல் சாதகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான சப் இன்ஸ்பெக்டர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
சென்னை, ஆவடி கோயில் பதாகையை அடுத்த கன்னட பாளையத்தைச் சேர்ந்தவர் சிவா (49). கடந்த 18ம் தேதி ஆவடி பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
ஆனால், ஆவடி சப் இன்ஸ்பெக்டர் நாகதேவன் இவர் மீது கஞ்சா தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் பிச்சைக்காரர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்தில் சிவா சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட்டுக்கு தகவல் போனது. இதையடுத்து நேரடியாக காவல் நிலையம் வந்த ஆணையர் ஜாங்கிட் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து கஞ்சா வழக்கில் போட வேண்டியவரை, பிச்சைக்காரர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து அவருக்கு சாதகமாக நடந்து கொண்டதற்காக நாகதேவனை ஆணையர் அலுவலத்திற்கு மாற்றி அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications