இரும்பு கம்பி விழுந்து குவாரி தொழிலாளி பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தாம்பரம் அருகே கல் குவாரியில் நடந்த கோர விபத்தில் இரும்புக் கம்பி விழுந்து 28 வயது தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் பெயர் மணி. இவர் கீரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். தாம்பரம் அருகே உள்ள கல் குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
நேற்று அங்குள்ள மலைப் பாறையை பெயர்க்கும் பணியில் பெரிய டிரில்லிங் இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அப்போது அதில் இருந்த பெரிய இரும்பு கம்பி கீழே விழுந்ததில். இதில் சிக்கி மணி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மூன்று டிராக்டர்களும் சிக்கி சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications