சோனியா நாளை கோவை-ஈரோடு வருகை
ஈரோடு: ஈரோட்டில் நாளை நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகிறார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் நாளை மாலை 3.20 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையம் வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு செல்கிறார்.
அங்கு வ.உ.சி. மைதானத்தில் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியா பேசுகிறார். இதையடுத்து ஹெலிகாப்டரில் கோவை திரும்பும் அவர் சிறப்பு விமானத்தில் சென்னை செல்கிறார்.
சோனியாவின் வருகையையொட்டி கோவை மற்றும் ஈரோட்டில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூட்டம் கூட்ட எஸ்எம்எஸ்:
இதற்கிடையே ஈரோடு பொதுக் கூட்டத்திற்கு வரும் சோனியாவை வரவேற்க தொண்டர்கள் பெரும் அளவில் திரள வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரசாருக்கு இளங்கோவன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் கோஷ்டிகள் சார்பில் எஸ்.எம்.எஸ். அனுப்ப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications