சொத்து ஏலம்-தினகரன் மனுவை நிராகரிக்க கோரிக்கை
சென்னை: பெரா போர்டு விதித்த ரூ. 28 கோடி அபராதத் தொகையை வசூலிக்க தனது சொத்தை ஏலம் விடும் சென்னை மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு எதிராக அதிமுக எம்.பியும் சசிகலாவின் அக்காள் மகனுமான தினகரன் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பொருளாதார குற்ற தடுப்பு இயக்குநரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் வழக்கறிஞரான தண்டபாணி, பொருளாதாரக் குற்றத் தடுப்பு துணை இயக்குநர் மோகன்தாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த வழக்கில் எங்களையும் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மேல் விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரா சட்ட விதிமீறல் தொடர்பாக தினகருக்கு பொருளாதார குற்றத் தடுப்பு இயக்குநரகம் ரூ. 31 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து தினகரன் பெரா போர்டில் அப்பீல் செய்தார். இதையடுத்து ரூ. 28 கோடியாக அபராதம் குறைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த தொகையை வசூலிக்க சென்னையில் உள்ள தினகரின் சொத்துக்களை ஏலம் விட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் தினகரன். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏலம் விடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications