'வெள்ளக் காடு'.. பீகாருக்கு தமிழகம் ரூ.10 கோடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடும் வெள்ளத்தால் நிலை குலைந்து போயுள்ள பீகார் மாநிலத்துக்கு தமிழகம் ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பீகார் மாநிலத்தையே நிலை குலையச் செய்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பல லட்சம் ஏழை, எளிய மக்கள் வீடு இழந்தும், நூற்றுணக்காணோர் உயிர், உடைமைகளை இழந்தும் அந்த மாநிலமே சோகக் காடாக மாறி வருகிற நிலைமையைக் கண்டு அதிர்ச்சியும் துய ரமும் அடைந்த தமிழக முதல்வசர் கருணாநிதி அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்களின் சார்பில் ஆறுதலை வழங்குவதோடு,
நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதற்கான காசோலை இன்றைய தினமே பீகார் மாநில முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டு்ள்ளது.












Click it and Unblock the Notifications