வங்கியின் ஏமாற்று வேலை-நீதிமன்றம் அபராதம்
கோவை: வீட்டுக் கடன் பெற்ற விவகாரத்தில் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கும்படி, வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி செந்தில்வடிவு. வீடு கட்டுவதற்காக சண்முகம், கோவையில் உள்ள ஒரு பிரபல வங்கியில் ரூ.9 லட்சம் கடன் பெற்றார்.
கடன் பெறுவதற்காக, வங்கியின் அறிவுறுத்தலின்படி வீட்டுக்கு ரூ.36,877 இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை கட்டியுள்ளார். இந்த நிலையில் சண்முகம் சாலை விபத்தில் திடீரென இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் சண்முகத்தின் மனைவி செந்தில்வடிவுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது.
அதில், சண்முகம் உயிருடன் இருக்கும்போது அவர், மருத்துவ பரிசோதனை செய்யாமல் வீட்டு இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை பெறப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் பணம் தர மறுக்கின்றனர். எனவே நிலுவையில் உள்ள வீட்டு கடன் தொகையை நீங்கள்தான் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து செந்தில் வடிவு கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ பரிசோதனை குறித்து வங்கிதான் அறிவுறுத்தியிருக்க வேண்டும். எனவே வீட்டுக்கடன் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்து, சண்முகம் இறந்து பின்பு கட்டிய கடனுக்கான தொகையையும் திரும்ப வழங்க வேண்டும்.
மேலும் மனுதாரர் மன உளைச்சல் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,000, செலவு தொகையாக ரூ.1000 ஆகியவற்றை, வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications