ஸ்பென்சர் பிளாசாவில் தீவிபத்து - ரூ. 25 லட்சம் சேதம்
சென்னை: சரவணா ஸ்டோர்ஸைத் தொடர்ந்து இன்னொரு பிரமாண்ட வணிக வளாகமான ஸ்பென்சர் பிளாசாவில் நேற்று இரவு திடீர் தீவிபத்து நடந்தது. இதில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் தீயில் கருகின.
சரவணா ஸ்டோர்ஸ் தீவிபத்தின் பாதிப்பே இன்னும் மக்கள் மனதிலிருந்து விலகாத நிலையில், நேற்று இரவு ஸ்பென்சர் பிளாசாவில் தீவிபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவின் முதல் மாடியில் ஷோல்டர்ஸ் என்ற ரெடிமேட் துணிக் கடை உள்ளது. இங்கு நேற்று கடை மூடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து ஜெனரேட்டரை இயக்கியுள்ளனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து கடையை மூடி விட்டு அனைவரும் கிளம்பி விட்டனர். ஆனால் ஜெனரேட்டரை ஆஃப் செய்ய மறந்து விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் மின்சாரம் வந்தபோது மின்கசிவு ஏற்பட்டு அந்தக் கடையில், தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. அக்கம் பக்கத்து கடைகளுக்கும் தீ பரவுவதற்கு முன்பு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து தீவிபத்ைத முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து போய் விட்டன.
ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில், தீயணைப்புக் கருவிகள் முழு அளவில் பொருத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக நேற்று ஏற்பட்ட தீயை உடனடியாக அணைக்க முடிந்தது, பெரும் நாசம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications