சிறையில் பெண் கைதிகள் நிர்வாண சித்ரவதை?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் சிறையில் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

திண்டிவனம் மனித உரிமை இயக்க செயலாளர் லட்சுமி. இயக்கத்தின் உறுப்பினர் மீனா. மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியது தொடர்பான வழக்கில் இருவரையும் திண்டிவனம் போலீஸார் கைது செய்து விழுப்புரம் மகளிர் கிளை சிறையில் அடைத்தனர்.

சிறையில், சக கைதிகள் முன் இருவரது ஆடைகளையும் களைந்து நிர்வாண சித்ரவதை செய்ததாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட எஸ்.பி. அ.அமல்ராஜ், சிறைத்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு மனித உரிமைகள் இயக்கத்தினர் புகார் அனுப்பினர்.

அதைத் தொடர்ந்து சிறைத்துறை ஏடிஜிபி நடராஜ் உத்தரவின்படி கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கனகராஜ் விழுப்புரம் கிளை சிறையில் உள்ள மீனா, லட்சுமி ஆகியோரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது:

குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை சிறையில் அடைக்கும்போது சோதனை செய்வது வழக்கமாக உள்ள நடைமுறைதான்.

இருப்பினும் சிறையில் உள்ள கைதிகளை பரிசோதனை செய்ய நவீன ஸ்கேன் வசதி இருந்தால் இத்தகைய புகார்கள் எழ வாய்ப்பு இருக்காது. அதே நேரத்தில், போலீசாருக்கும், மனித உரிமை பயிற்சி அளிக்க வேண்டும்.

மீனா, லட்சுமி ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+