இந்த காயம் ஆற நீண்ட காலமாகும்.. உலகக்கோப்பை தோல்விக்கு பின் லியோனல் மெஸ்ஸி உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

நியூஜெர்சி: ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த காயம் ஆறுவதற்கு சில காலம் ஆகும் என்று அர்ஜென்டினா ஜாம்பவான் வீரரான லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ள மெஸ்ஸி, உலகக்கோப்பையின் போது கிடைத்த நல்ல நினைவுகளை மனதில் வைத்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் ஆதிக்கத்தை அர்ஜென்டினா அணியால் கொஞ்சமும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அர்ஜென்டினா அணியின் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

Lionel Messi

இந்தப் போட்டியில் அடைந்த தோல்வியால் ஜாம்பவான் வீரரான லியோனல் மெஸ்ஸி மைதானத்திலேயே கண்ணீவிட்டு அழுதார். இதனால் உலகம் முழுவதும் மெஸ்ஸி ரசிகர்கள் சோகம் அடைந்தனர். ஜாம்பவான் வீரரான மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை போட்டி இப்படியா சோகத்தில் முடிவடைய வேண்டும் என்று விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் மெஸ்ஸி தோல்வி அடைந்ததும் ஒரு வகையில் நல்லது தான்.. ஏனென்றால் அர்ஜென்டினா அணி மோசடி செய்து வெல்வதாகவும், ஃபிஃபாவின் செல்லக்குழந்தை மெஸ்ஸி என்ற விமர்சனங்கள் சுக்குநூறாக உடைந்துள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தோல்வி தொடர்பாக மெஸ்ஸி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மெஸ்ஸி, உலகக்கோப்பை பைனலில் அடைந்த தோல்வியால் ஏற்பட்ட காயம் அளவிட முடியாதது. இந்த காயம் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதேநேரத்தில் உலகக்கோப்பையின் போது கிடைத்த சிறந்த நினைவுகளையும் மனதில் வைத்து கொள்ள விரும்புகிறேன். நாடு முழுவதும் இருந்து அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு கிடைத்தது. அது மீண்டும் எங்களை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக நிறுத்தி இருக்கிறது.

அர்ஜென்டினா அணியின் சாதனையை இப்போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால் அர்ஜென்டினா அணி தொடர்ந்து 2 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அதற்கு ஆதரவாக அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+