இந்தியா கடந்து வந்த பாதை...
டெல்லி: இந்தியாவின் அணு தீண்டாமை 34 ஆண்டுகளுக்குப் பிறகு விலகியுள்ளது. இதன் கதை நீண்டது, நெடியது. அதன் தொகுப்பு இதோ...
1968: என்.பி.டி எனப்படும் அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்தது. பாரபட்சமான ஒப்பந்தம் இது என இந்தியா காரணம் கூறியது.
மே, 18, 1974: இந்தியா தனது முதல் அணு குண்டு சோதனையை நடத்தியது.
மார்ச், 10, 1978: அணு பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான அணு சக்தி உதவிகளை அமெரிக்கா நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மே 11-13, 1998: இந்தியா தனது 2வது அணு குண்டு சோதனையை நடத்தியது. மொத்தம் 5 சோதனைகளை இந்தியா நடத்தியது.
ஜூலை, 18, 2005: இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் குறித்து அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும், வாஷிங்டனில் கூட்டாக அறிவித்தனர்.
மார்ச், 1, 2006: அதிபரான பின்னர் முதல் முறையாக ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
மார்ச், 3, 2006: இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து புஷ்ஷும், சிங்கும் கூட்டாக வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.
ஜூலை, 26, 2006: அமெரிக்க பிரதிநிதிகள் சபை, இந்தியாவை அணுப் பரவல் ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைப்பதற்கும், இந்தியாவுக்கு அமெரிக்காவின் அணு ஒத்துழைப்பை வழங்கவும் வகை செய்யும் ஹென்றி ஹைட் அமெரிக்க - இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்பு சட்டம் -2006 என்ற சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஜூலை, 28, 2006: அணு சக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என இடதுசாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
நவ. 16, 2006: அமெரிக்க செனட் சபை, அமெரிக்க- இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்க கூடுதல் புரோட்டோகால் அமலாக்க சட்டத்தை நிறைவேற்றியது.
ஆக, 3, 2007: இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான 123 ஒப்பந்தத்தை இரு நாடுகளும் வெளியிட்டன.
ஆக, 13, 2007: அணு சக்தி ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்தார்.
ஆக, 17, 2007: அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்தால், அரசுடனான எங்களது தேனிலவு முடிவுக்கு வரும் என்று சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
செப்டம்பர், 4, 2007: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
மார்ச், 3, 2008: அணு சக்தி ஒப்பந்த்தை நிறைவேற்ற முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசுக்கு இடதுசாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மார்ச், 6, 2008: மார்ச் 15ம் தேதிக்குள் அரசு தனது முடிவை சொல்ல வேண்டும் என இடதுசாரிகள் எச்சரிக்ைக விடுத்தனர்.
மார்ச், 7, 2008: அணு சக்தி ஒப்பந்தத்தை தொடர அரசு விரும்புகிறதா என்று கேட்டு அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியது.
ஜூன், 17, 2008: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்து ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரினார்.
ஜூன், 30, 2008: அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
ஜூலை, 8, 2008: இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றன.
ஜூலை, 9, 2008: இந்தியாவின் வரைவறிக்கை சர்வதேச அணு சக்தி ஏஜென்சி உறுப்பு நாடுகளிடம் சுற்றுக்கு விடப்பட்டது.
ஜூலை, 10, 2008: லோக்சபாவில் நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
ஜூலை, 22, 2008: நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது.
ஆக, 1, 2008: இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய வரைவறிக்கைக்கு ஐ.ஏ.இ.ஏ. போர்டு ஒப்புதல் அளித்தது.
ஆக. 21-22, 2008: என்.எஸ்.ஜி கூட்டம் நடந்தது. பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் எதிர்ப்பால் முடிவெடுக்காமல் கலைந்தது.
செப். 4-6, 2008: 2வது முறையாக கூடிய என்.எஸ்.ஜி. அமெரிக்காவின் திருத்த வரைவறிக்கை மற்றும் இந்தியாவின் உறுதிமொழியை பரிசீலித்து, அதில் திருப்தி அடைந்து இந்தியாவுக்கு சலுகைகளை வழங்க ஒப்புதல் அளித்து, இந்தியாவின் 34 ஆண்டு அணு தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications