சிக்னல் பிரச்சினை: பொய் பேசுகிறது சன் டிவி - அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு கேபிள் டிவிக்கு சிக்னல் தரும் விவகாரத்தில் சன் டிவி நிர்வாகம் பொய் பேசி வருகிறது என்று தமிழக அரசு வர்ணித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு சன்டிவி தனது சேனல்களை தருவதற்கு தாமதித்து வருவதுடன் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அரசு கேபிள் நிறுவனத்திற்கு சேனல்கள் தர நாங்கள் காலதாமதம் செய்யவில்லை.

அரசு அதிகாரிகள் தான் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள் என்று சன் நெட்வொர்க் ஒரு முழுப் பொய்யை அறிக்கையாகக் கொடுத்திருக்கிறது.

அரசு கேபிள் டிவி நிறுவனம் சன் நெட்வொர்க் நிறுவனம் கேட்ட சட்டப் படியான அனைத்து விவரங்களையும் அவ்வப்போது கொடுத்தும் கூட அவர்களது சேனல்களை அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு வழங்காமல் தாமதம் செய்து கொண்டு வருகிறார்கள்.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் கால அவகாசம் எந்தக் கட்டத் திலும் சன் நெட்வொர்க் நிறுவனத்திடம் கேட்கப்படவே இல்லை.

ஏற்கனவே திட்டமிட்டபடி அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் சென்னை மாநகரத்திலும், வேலூரிலும், நெல்லையில் அமைக்கப் பட்டு வரும் கட்டுப் பாட்டு மையத்தின் மூலம் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் அரசு கேபிள் டிவி தனது சேவையை வழங்கிட உள்ளது.

தஞ்சையிலும், கோவையிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் அரசு கேபிள் டிவி தனது சேவையை தற்போது வழங்கி வருகிறது. செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழகம் முழுதும் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தனது சேவையை வழங்கும்.

அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் முயற்சிகளுக்கு அனைத்து கேபிள் ஆப்பரேடர்களும், தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் களும், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்கிட முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிக்கை மூலம் செப்டம்பர் 15ம் தேதிக்குள் சன்டிவி சிக்னல்களை அரசு கேபிள் நிறுவனத்திற்கு தர வேண்டும் என அரசு கெடு விதித்துள்ளதாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+