வேலூர்: கள்ளக்காதலியின் தலையை துண்டித்து கொன்ற காதலர்
வேலூர்: கள்ளக் காதலியை கொடூரமாக கொலை செய்து, அவரின் தலையை வெட்டி எடுத்து போலீஸிசில் சரணடைந்தார் கள்ளக்காதலன்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் (45). கூலித் தொழிலாளியான இவர்மனைவி, குழந்தைகளை பிரிந்து கடந்த 21 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.
பெரியவரிகம் காலனியைச் சேர்ந்த தம்பதி சாமிநாதன் - ராஜேஸ்வரி (45). இவர்களுக்கு 2 மகள்கள், மகன் உள்ளனர். சாமிநாதன் கேரளாவில் வேலை செய்கிறார். ராஜேஸ்வரி, தான் வளர்த்து வரும் மாடுகளை மேய்க்க வெளியில் செல்வார். அப்போது நாகப்பனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இவர்களுக்குள் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
ராஜேஸ்வரி வீட்டு செலவுக்கு நாகப்பன் பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி ராஜாவுடனும் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதை அறிந்த நாகப்பன் நாகப்பன் அதிர்ச்சி அடைந்தார்.இந்நிலையில் நேற்று காலை மாடு மேய்ப்பதற்காக ராஜேஸ்வரி சென்றார். அப்போது அங்கு வந்த ராஜாவுடன் பேசி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நாகப்பனும் அங்கு வந்தார்.
ராஜாவும், ராஜேஸ்வரியும் தனித்து இருந்ததைப் பார்த்த நாகப்பனுக்கு கோபம் வந்தது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் ராஜேஸ்வரியின் தலையை வெட்டி கொலை செய்தார்.
பின்னர் தலையை தனியாக சாக்குபையில் போட்டு, உமராபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்றார் நாகப்பன். நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். போலீஸார் உடலையும், தலையையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். நாகப்பன் கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications
