ஹைதராபாத்-பாலத்தின் மீது விமானம் விழுந்து 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

ஏபி பிளையிங் கிளப் என்ற தனியார் கிளப்புக்கு சொந்தமான அந்த செஸ்னா ரக விமானம் இன்று காலை பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து பயிற்சியாளர் மற்றும் பயிற்சி விமானியுடன் கிளம்பியது.
பயிற்சி முடித்துக் கொண்டு தரையிறங்க முயன்றபோது ஹைதராபாத்தின் பதே நகர் பகுதியில் ஒரு பாலத்தின் மீது விழுந்து நொறுங்கியது.
இதில் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் பயிற்சியாளரான ஜெயின், பயிற்சி விமானியான ஸ்ரீனிவாஸ் ஆகியோர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
வீடுகள் சேதமடைந்ததில் பலர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications