தேர்தலில் திமுக கூட்டணி தோற்கும்: இல.கணேசன்
ஈரோடு: நிர்வாக தவறுகளை மறைக்க, ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை அறிவித்துள்ளது திமுக அரசு. ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோற்பது உறுதி என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் கூறினார்.
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வந்தபோது பல ஜகஜால வேலைகளை செய்து வெற்றி பெற்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதை அடுத்து இங்கும் அதே நிலைதான்.
திமுக அரசுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். அதை நாங்கள் வரவேற்கிறோம். மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க திமுக அரசு தவறிவிட்டது. தவறை மறைக்கத்தான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச டிவி என வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறது.
எதை செய்தாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோற்பது உறுதி. லோக்சபாவில் இடதுசாரிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்ததை போல நாங்களும் கொண்டு வருவோம்.
இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக தேமுதிக உள்ளது. அதன் தலைவர் விஜயகாந்த் நல்ல நண்பர். தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என்று கூற முடியாது என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications