சேலத்தில் திமுகவினர்-வழக்கறிஞர்கள் மோதல்
சேலம்: சேலத்தில் நடந்த சட்ட விழப்புணர்வு முகாமில் திமுக நிர்வாகிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.
சேலத்தில் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மனித உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் உரிமை அறியும் சட்டம் போன்றவைகள் குறித்து விளக்க உரை சேலம் மையப் பகுதியில் நடைபெற்றது.
அப்போது பேசிய பலரும் அரசு நிர்வாகத்தில் திமுகவினரின் தலையீடுகள் பற்றி விமர்சித்தனர். இதை தூரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அப் பகுதியின் திமுக கவுன்சிலர் குல்ஜார் முகம்மத், திமுக வார்டு செயலாளர் முகம்மத் உள்ளிட்ட சிலர் விழிப்புணர்வு கூட்டத்தில் புகுந்து வாக்கு வாதம் செய்தனர்.
வாக்குவாதம் முற்றி, வழக்கறிஞர்களை திமுகவினர் தாக்கினர். இதில் வழக்கறிஞர்கள் சிலர் நிலைகுலைந்து விழுந்து படுகாயமடைந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த வழக்கறிஞர்கள் சிலர் திமுகவினர் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மோதல் வலுத்ததை அடுத்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சிதறி ஓடினர். அப்போது பலர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, விழிப்புணர்வு கூட்டத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பற்றி வழக்கறிஞர்கள் சிலர் தரக்குறைவாக பேசியதாக முகம்மத், சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications