கன்னியாகுமரி-நாகூர் தனி ரயில்: ஆர்.வேலு
மதுரை: திருவாரூரிலிருந்து நாகூருக்கு புதிய அகலப் பாதை அமைக்கும் பணி முடிந்தவுடன், கன்னியாகுமரியில் இருந்து நாகூருக்கு தனி ரயில் விடப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரை, திண்டுக்கல் இடையிலான இரட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.128 கோடியில் இருந்து ரூ.200 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாதை அமைக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. மதுரை, கொடைக்கானல் அகல ரயில்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு வருடத்தில் 450 கிலோ மீட்டர் கேஜ் பாதை அகலப் பாதையாக மாற்றப்படும். அடுத்த ஆண்டில் 700 கிலோ மீட்டர் கேஜ் பாதை, அகலப் பாதையாக மாற்றப்படும்.
நெல்லை-திருச்செந்தூர் இடையே உள்ள ரயில் பாதைக்கான பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும். விழுப்புரம்-திருச்சி இடையே மின்மயமாக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பாதை மின் மயமாக்கப்படும்.
அடுத்த ஆண்டு மதுரையும், அதற்கு அடுத்த ஆண்டு கன்னியாகுமரியும் மின்மயமாக்கப்படும். அதே போல திருவாரூரிலிருந்து நாகூருக்கு புதிய அகலப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்தவுடன், கன்னியாகுமரியில் இருந்து நாகூருக்கு தனி ரயில் விடப்படும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications