திமுக கூட்டணியில் எப்போதும் இல்லை-சிபிஎம்
டெல்லி: திமுகவுடன் தேர்தல் உடன்பாடு மட்டுமே கொண்டோம். அந்தக் கூட்டணியில் இல்லை. எனவே கூட்டணியை விட்டு விலகுகிறோமா இல்லையா என்றே பேச்சுக்கே இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கமளித்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர்கள் கூறுகையில்,
கடந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் அணி அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள்தான் இடம் பெற்றன. இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த கூட்டணியுடன் தேர்தல் உடன்பாடு மட்டுமே கொண்டது.
தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப தொகுதி பங்கீடு செய்து கொண்டன. அதோடு சரி. திமுக கூட்டணியில் இடதுசாரிகள் அங்கம் வகித்தது கிடையாது. அப்படியிருக்கும்போது திமுகவுடன் உறவை முறித்துக் கொண்டதாகவோ அல்லது உறவை முறித்துக் கொள்ளப்போவதாகவோ கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை.
வரும் தேர்தலில் கூட்டணி திமுகவுடனா? அதிமுகவுடனா? என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில்தான் உரிய முடிவு எடுக்கப்படும். அந்த முடிவை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்தே எடுக்கும்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு ஆதரவு அளிப்போம். தவறுகள் நடந்தால் சுட்டிக்காட்டி போராடுவோம். இரண்டு ரூபாய்க்கு அரிசி போட்டார்கள், வரவேற்றோம். இப்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையும் வரவேற்கிறோம்.
காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்ற நிலை வந்தால் திமுகவுடன் உறவு கொள்வதில் எங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்தனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன












Click it and Unblock the Notifications