சீர்திருத்தப் பள்ளி ஊழியரைக் கொன்று விட்டு 6 சிறார்கள் தப்பினர்
தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளி ஊழியரை மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொன்று விட்டு 6 சிறார்கள் தப்பி ஓடினர். போலீஸாரின் தீவிர முயற்சியால் அவர்களில் 2 பேர் சிக்கியுள்ளனர். மற்ற நால்வரைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் எதிரே அரசினர் கூர்நோக்கு இல்லம் (சிறார் சீர்திருத்தப் பள்ளி) உள்ளது. இங்கு 149 சிறார்கள் பல்வேறு குற்றங்களில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறார் பள்ளியின் கண்காணிப்பாளராக ரத்னம் இருக்கிறார். பல்வேறு பிரிவு ஊழியர்கள் 52 பேர் உள்ளனர்.
இங்குள்ள தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் பணியில் தஞ்சையைச் ேசர்ந்த முனுசாமி (56) என்பவர் இருந்து வந்தார்.
தினசரி காலை 9 மணிக்கு பணிக்கு வரும் முனுசாமி மாலை 5 மணி வரை பணியில் இருப்பார். அப்போது சிறார் கைதிகளை தண்ணீர் பாய்ச்சுவது, மரக் கன்று நடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவார்.
நேற்று மாலையும் வழக்கம் போல 6 சிறார்களுடன் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தார் முனுசாமி. அந்த சமயத்தில் அங்கு வேறு யாரும் இல்லை.
அப்போது முனுசாமியை சூழ்ந்த சிறுவர்கள் அவரை மண்வெட்டியால் தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த முனுசாமி கீழே விழுந்தார். பின்னர் பேரும் சேர்ந்து சரமாரியாக அடித்தும், மண்வெட்டியால் தாக்கியும் படுகாயப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகளும், போலீஸாரும், முனுசாமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முனுசாமி உயிரிழந்தார்.
தப்பி ஓடிய சிறுவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். பஸ் நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அரசுப் பேருந்தில் தப்பிச் சென்ற தண்டாயுதபாணி (13), மினி பஸ் மூலம் தப்பிய சிங்காரவேலு (13) ஆகியோர் பிடிபட்டனர். இவர்கள் இருவரும் கள்ளச்சாராயம் விற்றது, திருட்டு ஆகிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.
தப்பி ஓடிய மற்ற நான்கு பேரான ராஜேஷ், காரல் மார்க்ஸ், வெங்கடேஷ், செல்வம் ஆகியோரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஊழியரைக் கொன்று விட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து 6 பேர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications