ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆவின் அலுவலர் கைது
பெரம்பலூர்: பால் உற்பத்தியாளரின் பணத்தை பட்டுவாடா செய்வதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆவின் நிறுவன அலுவலர் கருணாநிதியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன். பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். இவர் இந்த பகுதியின் சுற்றுவட்டார விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து பெரம்பலூரில் உள்ள ஆவின் நிறுவன குளிரூட்டும் மையத்திற்கு சப்ளை செய்து வருகிறார்.
சப்ளை செய்த பாலுக்கான பணம் ரூ.1 லட்சத்து 74,000திற்கான காசோலையை கேட்டு பெரம்பலூர் ஆவின் குளிரூட்டும் மைய தனி அலுவலர் கருணாநிதியை அணுகினார்.
அதற்கு கருணாநிதி ரூ.500 லஞ்சம் தந்தால் காசோலை தருவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துச்செல்வன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கருணாநிதியை கண்காணித்தனர். போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூ.500 பணத்தை கருணாநிதியிடம் முத்துச்செல்வன் லஞ்சமாக கொடுத்தார்.
கருணாநிதி பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கருணாநிதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications