குடிகாரத் தந்தையை அடித்துக் கொன்றார் மகள்
ஆறுமுகநேரி: வீட்டில் இருந்து 50 ரூபாயை எடுத்து சென்று குடித்துவிட்டு, தன்னை கொல்ல வந்த தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்தார் மகள். அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி அருகேயுள்ள காயல்பட்டிணம் லட்சுமிபுரத்தை சேர்ந்த தம்பதி சின்னத்துரை-சவுரியம்மாள். இவர்களது ஒரே மகள் செல்வராணி. செல்வராணியை அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமாருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கு 5 வயதில் திவ்யா என்ற மகள் உள்ளார். செல்வகுமார் ஏற்கனவே திருமணமானவர். சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வகுமார் பிரிந்து சென்றுவிட்டார். மீண்டும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் செல்வராணி தாய் சவரியம்மாளுடன் வசித்து வந்தார். சின்னத்துரை ஒழுங்காக வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு மனைவி, மகளுடன் சண்டை போட்டு வந்தார். சவுரியம்மாளும், செல்வராணியும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைக் கவனித்து வந்தனர்.
இந்நிலையில் செல்வராணி வீட்டில் மறைத்து வைத்திருந்த 50 ரூபாயை, சின்னதுரை எடுத்துச் சென்று குடித்து விட்டு வந்தார். பணம் எங்கே என்று சின்னதுரையிடம் செல்வராணி கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சின்னதுரை செல்வராணியின் கழுத்தை பிடித்து நெரிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி அருகில் கிடந்த கட்டையை எடுத்து சின்னதுரையை தலையில் அடித்தார். இதில் சின்னதுரை தலையில் படுகாயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராணி, சின்னதுரையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதுரை இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வராணியை கைது செய்தனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications