திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: அதிமுக எம்எல்ஏ மீது வழக்கு
மதுரை: திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக எம்எல்ஏ போஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் விரைவில் கைது செய்யக்கூடும் என்று தெரிகிறது.
திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ போஸ். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் செலவுக்காக திமுக கவுன்சிலர் செல்லத்துரையிடம் ரூ.11 லட்சத்து 57,000 கடனாக வாங்கியுள்ளார்.
குறிப்பட்ட தேதியில் கடனை திருப்பித் தராததால் எம்எல்ஏ போஸ் மீது மதுரை நீதிமன்றத்தில் செல்லத்துரை வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ரூ.4 லட்சத்து 4,000த்தை மட்டும் போஸ் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடனை திருப்பிதர மறுப்பதோடு, அடிக்கடி பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று போஸ் மிரட்டுவதாக நீதிமன்றத்தில் செல்லத்துரை மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி, அதிமுக எம்எல்ஏ போஸ் மீது வழக்கு தொடரும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து திலகர் திடல் போலீசார் போஸ் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications