200 மூட்டை ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
திண்டுக்கல்: கேரளாவிற்கு கடத்த இருந்த 200 மூட்டை ரேஷன் அரிசியை பழனி அருகே போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.25 லட்சம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கேரள பதிவு எண் கொண்ட லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடு்த்து எஸ்பி ஜெயஸ்ரீ உத்தரவின்படி டிஎஸ்பி சுந்தரேசன், இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் தலைமையிலான போலீஸார் ஒட்டன்சத்திரம்-பழனி இடையை வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட லாரி ஒன்று பழனி நோக்கி வேகமாக சென்றது. சந்தேகமடைந்த போலீஸார் லாரியை விரட்டிச் சென்று பச்சளநாயக்கன்ப்பட்டி அருகே மடக்கி நிறுத்தினர். லாரியை சோதனை செய்தபோது, அதில் 200 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.25 லட்சமாகும்.
லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ரேஷன் அரிசி கொண்டு செல்லப்படுவதாக கூறினார். இதையடுத்து லாரி உரிமையாளர் சீனிவாசன், அரிசி உரிமையாளர் பாலமுருகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். பாலமுருகனுக்காக ரேஷன் அரிசி கடத்தி சென்ற மற்றொரு லாரியை பொள்ளாச்சி அருகே போலீஸார் பிடித்துள்ளனர். பாலமுருகன், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications