நெல்லை அருகே லாரி மீது ரயில் மோதியது - டிரைவர் காயம்
நெல்லை: நெல்லை அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி மீது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் படுகாயமடைந்தார். லாரி 100 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்று காலை நெல்லை தாழையூத்து அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.
அங்கு உள்ள ஆள் இல்லாத ரயில்வே கேட் வழியாக கல்குவாரிகளுக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் சென்று வரும். இந்த ரயில்வே கேட்டை இன்று காலை 7.30 மணியளவில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக ஒரு லாரி வேகமாக வந்தது. இதை கவனித்த ரயில் என்ஜின் டிரைவர் உடனடியாக என்ஜினை ஆப் செய்து ரெயிலை நிறுத்த முயன்றார். அதற்குள் லாரியின் பின்புறத்தில் ரயில், மோதியது.
இதில் லாரி தூக்கி வீசப்பட்டது. லாரியில் இருந்த டிரைவர் ராஜாவும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் ராஜாவை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயில் என்ஜின் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்த முயன்றதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்கள்.
தகவலறிந்த நெல்லை ரயில்வே போலீசார், ரயில் நிலைய மேலாளர் கல்யாணி உள்பட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று லாரியை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சரி செய்தனர்.
இதனால் இன்று நெல்லை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகின. விபத்தில் சிக்கிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு நெல்லை ஜங்ஷனுக்கு வந்தது. என்ஜின் பரிசோதனை செய்யப்பட்டு 9.20 மணியளவில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications