உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை பெஞ்ச்சின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவற்றில் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 49 ஆக உள்ளது. இதை 60 ஆக உயர்த்த வேண்டும் என தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி வலியுறுத்தி வந்தார்.
இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பெஞ்சுக்கான நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகியுள்ளது.
ஏற்கனவே 4 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்து வந்தன. தற்போது கூடுதலாக 11 நீதிபதியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளன.
இந்த இடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள் மற்றும் மூத்த வக்கீல்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இப்பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டவுடன், சென்னையிலும், மதுரையிலும் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகள் விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications