டிஎஸ்பி மீது ஜெ பாய்ச்சல்-'ஆள் கடத்தலுக்கு உதவினார்'
சென்னை: சாத்தனூர் அணை திட்டக்குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல் மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை இடதுபுற கால்வாய் நீரைப் பயன்படுத்துவோர் பாசன சங்கத் தலைவர்கள் 27 பேரும், விழுப்புரம் மாவட்டம், சாத்தனூர் அணை வலதுபுறக் கால்வாய் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள் 22 பேரும் 2004ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களிலிருந்து திருவண்ணாமலை மாவட்ட இடதுபுறக் கால்வாய் பகிர்மானக் குழுத் தலைவர்களாக ஒன்பது பேரும், வலதுபுறக் கால்வாய் பகிர்மானக் குழுத் தலைவர்களாக எட்டு பேருமாக மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 17 பகிர்மானக் குழுத் தலைவர்களிலிருந்து, திட்டக்குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல், கடந்த 4ம் தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் அதிகாரியாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் தர்மலிங்கமும், திமுக சார்பில் ஜெயராமனும் போட்டியிட்டனர். இதில், தர்மலிங்கத்துக்கு ஆதரவாக ஓட்டளிக்க வந்த ரத்தினவேலுவை டிஎஸ்பி வீரராகவன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும், அவரை திமுகவைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் கடத்திச் செல்வதற்கும் உதவியாக இருந்திருக்கிறார். இதேபோல் மொட்டையன் என்பவரையும் ஓட்டளிக்க விடாமல் மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால், அதிமுக வேட்பாளர் வெற்றி பறிக்கப்பட்டு இருக்கிறது.
கட்சி சார்பற்ற முறையில் நடக்கும் தேர்தலில்கூட வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அராஜகத்தை அரங்கேற்றியிருக்கும் தமிழக அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, இந்தத் தேர்தல் மோசடியை எதிர்த்து அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications