ஆண்டிபட்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் ஜெ.

அதிமுகவின் பொது செயலாளராக 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வரும் 14ம் தேதி அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக் கூட்டம் ஆகியவை நடக்கிறது. இது அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அப்படியும் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற் கொள்ள இருக்கிறேன். அதை அண்ணா பிறந்த நாளான வரும் 15ம் தேதி அன்று எனது சொந்த தொகுதியான ஆண்டிப்பட்டியில் தொடங்குகிறேன்.
இடதுசாரிகள், பாமக கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்படும். மீடியாவுக்கு தெரியாமல் எந்த ரகசியமும் காக்க முடியாது.
மாநில அளவிலும், தேசிய அளவிலும் அதிமுக்குவுக்கு முக்கியப் பங்கு இருக்கப் போகிறது.
திமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் விலகியதை அடுத்து திமுக மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர அதிமுகவுக்கு அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால் மக்களின் நம்பிக்கையை திமுக அரசு ஏற்கனவே இழந்துவிட்டது. தனது இறுதி நாட்களில் திமுக அரசு உள்ளது.
அணு ஒப்பந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே மத்திய அரசை அதிமுக எதிர்த்து வருகிறது. தொடர்ந்து எதிர்த்தும் வருகிறோம். என்எஸ்ஜி ஒப்புதல் என்பது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தியா விற்றுவிட்டது என்பதுதான் அர்த்தம்.
இனி நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையை இழந்துவிட்டது என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications