போலீஸ் குவார்ட்டர்ஸில் பெண்ணுடன் கும்மாளம்-ஏட்டு மகன் கைது
சென்னை: சென்னையில் உள்ள போலீஸ் குடியிருப்பில், காதலியுடன், மது மயக்கத்தில் கும்மாளம் போட்டு அக்கம் பக்கத்தினரை கூச வைத்த தலைமைக் காவலரின் மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் உள்ள எக்ஸ் பிளாக்'கில் உள்ள 5-ம் நம்பர் வீட்டில் காதல் களியாட்டம் நடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் புகார் வந்தது.
இதையடுத்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ. நசீமாவுக்குத் தகவல் பறந்தது. அவர் போலீஸாருடன் சம்பந்தப்பட்ட குடியிருப்புக்கு விரைந்தார்.
அப்போது அந்த வீட்டிலிருந்து அரை குறை ஆடையுடன் ஒரு பெண் வேகம் வேகமாக வெளியேறி காத்திருந்த ஆட்டோவில் ஏறித் தப்பினார்.
இதையடுத்து போலீஸார் உள்ளே நுழைந்தனர். அங்கு மது போதையில் ஒரு இளைஞர் இருந்தார். அவரிடம் நசீமா யார் என்ன என்று கேட்டதற்கு, நான் இன்ஸ்பெக்டர் மகன், என்னை விசாரிக்க யாருக்கும் ரைட்ஸ் இல்லை என்று உளறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபரை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்று தண்ணீர் அடித்து போதையை தெளிவிக்க முயன்றனர். ஆனால் போதை சரியாக தெளியவில்லை. இருப்பினும் விசாரணையில், அவரது பெயர், புரூஸ் பியாசோ (25) என்றும், அவரது தந்தை குட்கர்னி மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏட்டாக பணிபுரிவதும் தெரிய வந்தது.
உடனடியாக குட்கர்னியை எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போது தந்தையிடமும், எஸ்.ஐ.நசீமாவிடமும் ஆபாசமாக பேசி சண்டை போட்டார் பியாசோ.
எனக்கு கராத்தே தெரியும், மோதிப் பாருங்கள் பார்ப்போம் என்றும் சவால் விட்டார். இதனால் போலீஸார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அவரைக் கைது செய்த போலீஸார், போதை தெளிந்த பின்னர் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனந்தன் என்பவரது வீட்டில்தான் பியாசோ கும்மாளம் போட்டுள்ளார். ஆனந்தன் குடும்பத்தினருடன் வெளியில் போயிருந்ததால், தனது வீட்டை கும்மாளத்திற்காக பியாசோவிடம் விட்டுச் ெசன்றுள்ளாராம்.
கைதான பியாசோ எம்.பி.ஏ படித்தவர். தரமணியில்உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கை நிறைய சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications