2 பெண்களிடம் பலாத்கார முயற்சி: போலீஸ்காரர் கைது
திருச்சி: திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தவித்த 2 இளம் பெண்களை விசாரணை என்று கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்ற ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அருண் என்பவரின் மகள் மகாலட்சுமி (21). அதே பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் மகள் திவ்யா (20). இவர்கள் இருவரும் கரூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.
அந்த வேலை பிடிக்காமல், இருவரும் சென்னைக்கு செல்வதற்காக திருச்சி பஸ் நிலையத்துக்கு இரவு 9 மணிக்கு வந்தனர். ஆனால், டிக்கெட்டுக்கு போதிய பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தங்களுடன் வேலை பார்த்த இளங்கோவன் என்பவரை போனில் தொடர்பு கொண்டு, நிலைமையை கூறி பணம் கேட்டுள்ளனர். அவரும் பணத்துடன் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
அப்போது ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சரவணன் (41) அங்கு வந்தார். அவர்கள் 3 பேரிடம சென்று, தான் கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டு விசாரித்துள்ளார்.
வர்களும் விவரத்தை கூறினர். ஆனால் அவர்கள் சந்தேகம் இருப்பதாக கூறி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினார்.
இளங்கோவை நடந்து வருமாறு கூறிவிட்டு, பெண்களை மட்டும் தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு அஞ்சல் அலுவலக மேம்பாலம் அருகில் உள்ள ரயில்வே குட்ஷெட் குடோனுக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதில் திவ்யா தப்பி மீண்டும் பஸ் நிலையத்துக்கு ஓடி வந்து இளங்கோவனுக்கு போன் செய்து விஷயத்தை கூறினார்.
இதையடுத்து பயந்து போன சரவணன், மகாலட்சுமியை மீண்டும் பஸ் நிலையத்துக்கே கொண்டு வந்தார்.
அவரிடம் இளங்கோவன் கேள்வி எழுப்பதே அவரை சரவணன் தாக்க முயன்றார். அப்போது அங்கு ரோந்து வந்த ஸ்ரீரங்கம் துணை கமிஷனர் ஞானசேகரன் இதை பார்த்து அவர்களிடம் விசாரித்தபோது, சரவணன் தங்களை பலாத்காரம் செய்ய முயன்றதை சொல்லி பெண்கள் இருவரும் கதறினர்.
இதையடுத்து சரவணனை போலீஸார் கைது செய்தனர். சரவணன் ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பின்னர் ரயில்வே பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளார். குடும்பத்துடன் பெல்ஸ் கிரவுண்ட் குடியிருப்பில் வசித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications