மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது
விழுப்புரம்: குடும்பம் தகராறில் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அன்ராயநல்லூரைச் சேர்ந்தவர் ஏழுமலை (32). இவருக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி (27) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அபிநயா (3) என்ற மகள் இருக்கிறாள்.
ஏழுமலைக்கும், சுந்தரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இதனால் கோபித்துக் கொண்ட சுந்தரி, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து ஏழுமலை, சுந்தரியை சந்த்து சமாதானம் செய்து குடும்பம் நடத்த பல முறை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை நேற்று சுந்தரியின் சகோதரர் ஆறுமுகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சுந்தரி கணவர் வீட்டுக்கு சென்றார். அப்போது, இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, கட்டையால் சுந்தரியை பயங்கரமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுந்தரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுந்தரியின் சகோதரர் ஆறுமுகம் திருவெண்ணைநல்லூர் போலீஸில் புகார் செய்தார். இதையடு்த்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications