ரீடெய்ல் அதிபர் மகளை மணந்தார் சர்கோஸி மகன்

Subscribe to Oneindia Tamil

{image-Jean Sarkozy-Jessica250_12092008.jpg tamil.oneindia.com}பாரீஸ்: பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் மகன் பிரெஞ்சு ரீடெய்ல் தொழிலதிபரின் மகளுக்கும் திருமணம் நடந்தது.

சர்கோஸிக்கு முதல் மனைவி மூலம் இரு மகன்கள் உள்ளனர். மூத்தவர் பியரி. இரண்டாவது மகன் ஜீன். 2வது மனைவி மூலம் 11 வயதில் லூயிஸ் என்ற மகன் உள்ளார்.

இப்போது மாடல் ப்ரூனியை 3வது மனைவியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சர்கோஸியன் மகன் ஜீன் சர்கோஸிக்கும் 22 வயதாகும் ஜீனுக்கும், பிரெஞ்சு ரீடெய்ல் தொழிலதிபர் செபார்னின் மகள் ஜெஸிகா டார்டி சபாயானுக்கும் புதன்கிழமை திருமணம் நடந்தது.

மேற்கு பாரீஸில் உள்ள நியூலி சர்ஷெய்ன் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த திருமணம் நடந்தது. இந்தப் பகுதியிலிருந்துதான் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் சர்கோஸி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்திலிருந்து தனது திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளார் ஜீன்.

திருமண நிகழ்ச்சியில் சர்கோஸி, அவரது லேட்டஸ்ட் மனைவியும், முன்னாள் மாடல் அழகியுமான கார்லா ப்ரூனி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1957ம் ஆண்டு செபாயன் தனது ரீடெய்ல் தொழிலைத் தொடங்கினார். பிரான்ஸிலேயே மிகப் பெரிய எலக்ட்ரிகல் ரீடெய்ல் கடைகளை இந்த நிறுவனம் வைத்துள்ளது.

சட்டம் படித்துள்ள ஜீன் ஜர்கோஸி, அரசியல்வாதியாகவும் இருக்கிறார். ஹாட்ஸ் டி செய்ன் பிராந்திய கவுன்சிலின் பிரதிநிதியாகவும் (அதாவது கவுன்சிலர்) இருக்கிறார். அங்குள்ள வலது சாரிக் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+