தென் மாநிலங்களில் பின் தங்கும் கேரளா-ப.சிதம்பரம்
கோவை : தென் மாநிலங்களிலேயே கேரளா தான் தொழில்துறை முதலீடுகளைப் பெறுவதில் பின்தங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் 80ம் ஆண்டு துவக்க விழாவில் சிதம்பரம் பேசியதாவது:
பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொழில்துறையில் அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன.
இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கத்தில் தொழில் முதலீடுகள் குறைவாகவே உள்ளன. தென் மாநிலங்களில் கேரளாவைத் தவிர, மற்ற மாநிலங்களில் முதலீடு அதிகளவில் பெறப்பட்டுள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களும் அதிக முதலீடு பெற்று முன்னேறி வருகின்றன. ஆனால், இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்கள், தொழில் துறையில் முதலீடு பெறுவதில் பின்தங்கியுள்ளன.
இங்கு அடிக்கடி நடக்கும் பல பிரச்னைகள்தான் இதற்கு காரணம். இதனால் தொழில் முனைவோர் முதலீடு செய்ய முன் வருவதில்லை என்றார்.