ஜெர்மனி தொழிலதிபரின் நவீன கண்டுபிடிப்பு - 'ஸ்பிரே கான்டம்'!

Subscribe to Oneindia Tamil

பான்: ஜெர்மனியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜான் வின்சென்ஸ் க்ராஸ் ஒரு வித்தியாசமான யோசனைப் பேர்வழி. அவரது வினோதமான யோசனையில் உருவாகியுள்ளது - ஸ்பிரே காண்டம் (ஆணுறை).

இவருக்கும் காண்டமுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. அதாவது காண்டம் ஆலோசனைக் கழகம் என்ற அமைப்பின் இயக்குநராக இருக்கிறார் க்ராஸ். எப்படி ஸ்பிரே காண்டம் குறித்த ஐடியா வந்தது என்பது குறித்து இப்படி விளக்குகிறார் க்ராஸ்.

நான் ஒரு கார் ஷெட்டுக்கு காரைக் கழுவுவதற்காக சென்றேன். ஜெர்மனியில் சுரங்கம் போன்ற ஒரு இடத்திற்குள் காரைச் செலுத்த வேண்டும். நாம் காருக்குள் இருப்போம். காரைச் சுற்றி, அந்த சுரங்கப் பாதையில் உள்ள பல்வேறு குழாய்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படும்.

அதைப் பார்த்துதான் எனக்கு ஸ்பிரே காண்டம் குறித்த ஐடியா பிறந்தது. இதே மாடலில் காண்டம் டிசைன் செய்தால் என்ன என்று யோசித்தேன்.

உடனடியாக ஒரு ஹார்ட்வேர் கடைக்குச் சென்றேன். பெரிய ட்யூப் ஒன்றை வாங்கினேன். அதில் கார் கழுவும் இடத்தில் இருப்பதைப் போல ஆங்காங்கு துளைகள் இட்டேன். பின்னர் இவற்றை ஒரு திரவ லேட்டக்ஸ் உள்ள பெட்டியுடன் இணைத்தேன். அந்த துளைகள் வழியாக ட்யூபுக்குள் திரவ லேட்டக்ஸ் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதை மாடலாக வைத்து ஸ்பிரே காண்டம்களை நான் உருவாக்கியுள்ளேன் என்கிறார் க்ராஸ்.

பீய்ச்சியடிக்கப்படும் லேட்டக்ஸ் திரவம் 10 விநாடிகளுக்குள் உலர்ந்து விட வேண்டும். ஆனால் அவரது காண்டத்தில், திரவம் உறைய 20 முதல் 25 விநாடிகள் வரை ஆகிறதாம்.

இந்த ஸ்பிரே காண்டம் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டிருந்தார் க்ராஸ். அவரது காண்டம் குறித்து பரிசீலித்துப் பார்த்து விட்டு பலரும் பலவிதமான சந்தேகங்களை அள்ளி தெளித்துள்ளனராம்.

லேட்டக்ஸ் உலர நெடு நேரம் எடுப்பதால் காண்டம் அணிபவர்களுக்கு அசவுகரியமாக இருக்குமே என்பது முக்கியமான சந்தேகம். திரவம் உலரும் வரை சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்வார்கள் (!), மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா அல்லது பாட்டுப் பாடிக் கொண்டிருப்பார்களா என்றும் க்ராஸை நோக்கி நக்கல் கேள்விகள் பாய்ந்துள்ளன.

திரவம் உலரும் வரை 'பார்ட்டி' காத்திருந்தால், அவரது 'பார்ட்னருக்குக்' கடுப்பாகி தூங்கப் போய் விட மாட்டாரா என்றும் 'முக்கியமான' சந்தேகத்தை எழுப்பியுள்ளனராம்.

இந்த குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வில் தற்போது மும்முரமாகியிருக்கிறார் க்ராஸ். லேட்டக்ஸ் உலரும் நேரத்தைக் குறைத்தால் இப்படிப்பட்ட கேள்விகளையும் குறைத்து விடலாம் என்கிறார் அவர்.

சரி இந்த நவீன ஸ்பிரே காண்டமின் விலை என்ன தெரியுமா? கொஞ்சம் ஜாஸ்திதான். ஒரு காண்டம் 15 யூரோ முதல் 25 யூரோ வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தோடு லேட்டக்ஸ் ரீபில்களையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ரீபிலை 10 முதல் 20 காண்டம்களுக்குப் பயன்படுத்தலாமாம். ஒரு ரீபிலின் விலை 7 யூரோ முதல் 10 யூரோ வரை உள்ளது.

வாடிக்கையாளர்கள் காண்டம் விலையைக் கூட பொருட்படுத்தவில்லை. ஆனால் உலரும் நேரத்தை கண்டிப்பாக க்ராஸ் குறைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் சந்தோஷ தருணங்கள், சோகமாக மாறி விடும் என்று எச்சரித்துள்ளனர்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+