மன்மோகன் சிங் விலக வேண்டும்: பாஜக
பஹ்ரைச் (உ.பி): அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் அரசு தோல்வி அடைந்து விட்டது. எனவே மக்கள் நலனை மனதில் கொண்டு பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் விலக வேண்டும். லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
உ.பி. மாநிலம் பஹ்ரைச் நகரில் நடந்த விஜய் சங்கல்ப கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்கக் கூடாது. அதற்கான தகுதியை அது இழந்து விட்டது.
அனைத்து வகையிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது. எனவே மக்கள் நல்லதுக்காக பிரதமர் பதவியை மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்.
தீவிரவாதத்தை அடக்குவதில் இந்த அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறி விட்டது.
எனவே பிரதமர் பதவியை உடனடியாக மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும். விரைவில் தேர்தல் நடந்து புதிய அரசு தேர்ந்தெடுக்க அவர் உதவ வேண்டும். அப்போதுதான் மக்களின் துயரங்கள் அனைத்துக்கும் விடிவு காலம் பிறக்கும்.
அணு ஒப்பந்த விவகாரத்திலும் இந்த அரசு மக்களை தவறான பாதையில் திசை திருப்பிக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் மக்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றார் ராஜ்நாத் சிங்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா?












Click it and Unblock the Notifications