சிவராஜ் பாட்டீலை ஒதுக்கும் சோனியா

ஆனால், உள்துறையை மட்டமாகக் கையாண்டு வரும் பாட்டீலை சோனியா காந்தி ஒதுக்க ஆரம்பித்துள்ளார்.
ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத், டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து உளவுப் பிரிவை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விட்டார் உள்துறை சிவராஜ் பாட்டீல் என பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
குறிப்பாக, டெல்லியில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக முன் கூட்டியே தெரிவித்தும் அதை சிவராஜ் பாட்டீல் சரிவர கையாளவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவும் சிவராஜ் பாட்டீலை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து நேற்று நடந்த காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளசிவராஜ் பாட்டீல் அழைக்கப்படவில்லை. அவரது பதவியைப் பறிக்க சோனியா காந்தி முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் கிளம்பின.
இந்த நிலையில் நேற்றைய கூட்டத்திற்குப் பின்னர் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், இக்கட்டான சமயம் இது. இந்தநேரத்தில்உள்துறை அமைச்சரின் ராஜினாமாவைக் கோருவது சரியல்ல.
இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியலை செய்கிறார்கள். பாஜக ஆட்சியில்இருந்தபோது, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ராஜினமா செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் அவர் ராஜினாமா செய்தாரா. அக்கோரிக்கைகளையெல்லாம் பாஜக நிராகரித்து விட்டது.
அப்படி இருக்கையில் இப்போது சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்யத் தேவையில்லை. அதற்கான அவசியம் எழவில்லை. கட்சிக்குள்ளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குள்ளும் அதுகுறித்து கேள்வி எழவில்லை என்றார்.
இதேபோல தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று சிவராஜ் பாட்டீலும் தெரிவித்துள்ளார்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications