உறுதிமொழி-'பொறுக்க முடியாமல்' கிளம்பிய அமைச்சர்
கோவை: அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, விழா முடியும் முன்பே கிளம்பிச் சென்றது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
கோவை மாவட்ட திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 9.00 மணிக்கு பேரணி நடந்தது. வடகோவை திமுக அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு, அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ராமநாதன், மாநகர செயலர் வீரகோபால், முன்னாள் எம்.பிக்கள் சுப்பையன், மோகன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பேரணி, பவுர் ஹவுஸ், டாடாபாத், 100 அடி ரோடு, சக்தி ரோடு வழியாக காந்திபுரத்தை அடைந்தது. அங்கு ஈ.வெ.ரா., சிலைக்கு முதலில் மாலை அணிவித்த அமைச்சர் பழனிசாமி, திருவள்ளுவர் பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் பழனிசாமி பேசினார். தனது பேச்சை முடித்த பின்னர், திமுக, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ராமநாதன் அண்ணாதுரை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உறுதிமொழி வாசிப்பார்; அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராமநாதன் உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கினார். 10 பக்கத்திற்கும் மேற்பட்ட உறுதிமொழியை தொடர்ந்து ராமநாதன் வாசிக்க, மேடைக்குக் கீழ் இருந்த திமுகவினர் வெயில் தாங்க முடியாமல், பொறுமையிழந்து கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.
ஆனாலும் விடாமல் ராமநாதன் உறுதிமொழியை வாசித்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில், அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியே மேடையிலிருந்து இறங்கிச் சென்று விட்டார். இருந்தாலும் ராமநாதன் விடுவதாக இல்லை. தொடர்ந்து உறுதிமொழியை வாசித்தபடி இருந்தார்.
ஒரு வழியாக 12.30 மணியளவில் அவர் உறுதிமொழியை வாசித்து முடித்து நிறுத்தினார். அத்துடன் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
தொண்டர்கள்தான் வெயில் தாளாமல் கலைந்தார்கள். அமைச்சராவது அண்ணா பிறந்த நாள் விழா உறுதிமொழியை முடிக்கும் வரை இருந்திருக்கலாமே!
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications