தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்குவேன்: சிரஞ்சீவி
ஹைதராபாத்: எங்கள் கட்சி தலைமையிலான ஆட்சி அமையும்போது மக்கள் விரும்பினால், ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவரை கண்டிப்பாக முதல்வராக்குவேன் என்று கூறியுள்ளார் பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அடுத்த சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில், ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர்தான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால், நிச்சயமாக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவேன். ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராவதற்கு வழிவிட தயக்கம் காட்ட மாட்டேன்.
தெலுங்கு தேசம், காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளை காட்டிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சி வாய்ப்பு அளிக்கும். பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை உயருவதற்கு பாடுபடுவேன்.
தெலுங்கானா பிரச்னையை இரண்டு வகையாக பார்க்கிறேன். முதலில் அந்த பகுதிகளில் வாழும் மக்களின் சுய மரியாதை. இரண்டாவது, சமத்துவமான வளர்ச்சி பணிகள். இந்த பிரச்னையை பொறுத்தவரை மக்களின் முடிவுதான் இறுதியாக இருக்க வேண்டும்.
தெலுங்கானா பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு அதிகமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
எங்கள் கட்சியில் ஊழல் கறை படிந்த அரசியல் தலைவர்களுக்கு வாய்ப்பு கிடையாது. எங்கள் கட்சியில் இணைந்துள்ள சில தலைவர்கள் மீது சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றார் சிரஞ்சீவி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications