ரூபாயின் மதிப்பு பெரும் சரிவு-ஏற்றுமதியாளர்களுக்கு நல்லது

Subscribe to Oneindia Tamil

மும்பை: டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்துக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு, நல்லதே என்பது குறிப்பிடத்தக்கது.

1998ம் ஆண்டு மே 14ம் தேதி பொக்ரானில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் பல நாடுகளும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அன்று ஒரே நாளில் மட்டும் இந்திய ரூபாயி்ன் மதிப்பு 2 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டது.

அதற்குப் பின்னர் ஒரே நாளில் இவ்வளவு பெரிய சரிவை (1.8 சதவீதம் அளவுக்கு) ரூபாய் கண்டுள்ளது இப்போது தான்.

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வந்ததால், அதற்கு நிகரான அனைத்து கரன்சிகளின் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரித்தது.

இதனால் டாலரில் பணம் ஈட்டிய சாப்ட்வேர், ஜவுளி உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. ஒரு டாலருக்கு ரூ. 49 வரை பணம் ஈட்டிய நிறுவனங்களுக்கு ரூ. 39 மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

இந் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கப் போவது நிச்சயம்.

இப்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 47 ஆக சரிந்துள்ளது.

அதே நேரத்தில் மதிப்பு மேலும் சரிவது பொருளாதாரத்துக்கு ஆபத்து என்பதால், ரிசர்வ் வங்கி உடனடியாக தலையிட்டு சந்தையில் பணப் புழகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது.

இதற்காக சந்தையில் 7 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டு ரூபாய் மதிப்பு மேலும் சரியாமல் தடுத்தது.

சென்செக்ஸ் 281 புள்ளிகள் சரிவு:

அமெரிக்காவின் நிதி நிறுவனங்கள் தொடர்ந்து ரு்க்கடிக்குள்ளாகியிருப்பதால், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று 181 புள்ளிகள் சரிந்தது.

இன்று சென்செக்ஸ் 180 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் ஏறுமுகம் கண்டாலும், பின்னர் 11 மணி அளவில் 180 புள்ளிகளை சென்செக்ஸ் இழந்தது. தேசிய பங்குச்சந்தையிலும் நிப்டி 51 புள்ளிகள் சரிந்தது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 281 புள்ளிகள் சரிந்திருந்தது. நிப்டி 66.56 புள்ளிகளஅ குறைந்து 4008.25-ல் நிலை பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+