கூட்டணி: பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு: பாஜக
சென்னை: சேலத்தில் 27ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கட்சியின் மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகிற 27ம் தேதி சேலத்தில் நடக்கிறது. அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் தலைமை வகிக்கிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அளவில் அமைக்கப்படும் கூட்டணி குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
நாளை நடக்க உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அடிக்கடி தண்டவாளங்களில் விரிசல்கள் ஏற்படுகிறது. இதற்கு அந்த துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்தான் பதில் சொல்ல வேண்டும்.
பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் சேர்ந்து 200 பாதிரியார்களை கொலை செய்யப் போவதாக எஸ்எம்எஸ் மூலம் வதந்திகளை பரப்புகின்றனர். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சினையை விடுதலைப் புலிகளை வைத்து பார்க்காமல் அங்குள்ள தமிழர்களின் உரிமையை வைத்து பார்க்க வேண்டும். அதனடிப்படையில் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகளை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று வீரப்ப மொய்லி சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. அதை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications