விஜயன் கொலை: பானுமதிக்கு 3 நாள் போலீஸ் காவல்

சென்னை ராமாவரம் தோட்டத்தில் வசித்து வந்த விஜயன், கடந்த ஜூன் மாதம் கோட்டூர்பூரத்தில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த விசாரணையில் விஜயனின் மனைவி சுதாவின் தங்கை பானு என்கிற பானுமதிதான் கூலிப்படையை ஏவி இந்தக் கொலையைச் செய்தார் என்பது தெரிய வந்தது.
கூலிப்படையின் தலைவராக காவலர் கருணா என்கிற கருணாகரன் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து பானு, கருணா உள்பட கும்பலில் இடம் பெற்றிருந்த அனைவரையும் போலீஸார் கூண்டோடு கைது செய்தனர்.
பெங்களூரில் கைது செய்யப்பட்ட பானு அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பானுமதி, கருணா ஆகியோரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி ைதாப்பேட்டை 23வது பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 10 நாள் காவலில் அனுப்ப வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீது நேற்று நீதிபதி விஜயக்குமார் உத்தரவைப் பிறப்பித்தார். இதற்காக பானுமதி, கருணா ஆகியோரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையிலிருந்து அழைத்து வந்திருந்தனர்.
நீதிபதி விஜயக்குமார் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் என்னை பெங்களூரிலிருந்து அழைத்து வந்து கைது செய்து விட்டனர். போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை என்று நீதிபதியிடம் பானு தெரிவித்தார்.
பின்னர் பானுவையும், கருணாவையும் வருகிற 19ம் தேதி மாலை வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்த நீதிபதி அன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications