அமெரிக்க விசா கட்டணம் அதிகரிப்பு!
சென்னை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு ரூபாய் உயர்ந்திருப்பதைத் தொடர்ந்து, அமெரிக்க விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதி முதல் விசா கட்டணமாக ரூ. 6,288 செலுத்த வேண்டும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும் 19ம் தேதி முதல், அனைத்து அமெரிக்க தூதரக அலுவலகங்களிலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முந்தைய 46 ரூபாய்க்கு பதிலாக 48 ரூபாயாக கணக்கிடப்படும்.
19ம் தேதிக்கு பிறகு புதிதாக விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ. 6,288 (131 அமெரிக்க டாலர்) கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
19ம் தேதிக்கு முன்பாக எச்.டி.எப்.சி வங்கியில் ரூ. 6,026 ரூபாய் கட்டணத்தை செலுத்தியவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கட்டணம் தொடர்பான முழுமையான விவரங்களை http://http://newdelhi.usembassy.gov என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications