ஜெ-வைகோ பேச்சு 'லைவ்': தயாநிதிக்கு திமுக கல்தா?

Subscribe to Oneindia Tamil

Dayanidhi Maran
சென்னை: தேனியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்தையும், மதுரையில் மதிமுக மாநாட்டில் வைகோ பேசியதையும் நேரடியாக ஒளிபரப்பியதால் திமுகவினரின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

நாளை சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிகவின் இளைஞர் அணி மாநாட்டையும் சன் டிவி ஒளிபரப்பலாம் என்பதால், அதற்குள் தயாநிதி மாறன் திமுகவை விட்டு நீக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை தினகரன் அலுவலகம் மீதான அழகிரி ஆதரவாளர்களின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்தினருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன். இருப்பினும் அவர் திமுகவிலிருந்து நீக்கப்படவில்லை. தொடர்ந்து மத்திய சென்னை தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார் தயாநிதி மாறன்.

அதுவரை ஈருயிர் ஓருடலாக இருந்து வந்த திமுகவும், சன் டிவியும் பிரிந்து விட்டன. கலைஞர் டிவி பிறந்தது. அதன் பின்னர் இன்று வரை சிற்சிறு உராய்வுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

சமீபத்தில் அரசு கேபிள் டிவி கழகத்திற்கு சன் டிவி சானல்களின் சிக்னல் தருவது தொடர்பாக அரசுடன் மோதல் போக்கில் இறங்கியது சன் டிவி. அரசு கடும் எச்சரிக்கை விடுத்து அறிவிப்புகளை வெளியிட்டது. இருந்தாலும் இந்த மோதல் தீர்ந்தபாடில்லை.

இந்த நிலையில் சமீபத்தில், திமுக தரப்பை பெரும் கொதிப்புக்குள்ளாக்கியது, தேனியில் ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்ைத சன் டிவி நேரடியாக ஒளிபரப்பியது.

ஜெயலலிதா அரசை குற்றம் சாட்டிப் பேசியதை அப்படியே ஒளிபரப்பிய சன் டிவி, கருணாநிதி குடும்பத்தார் குறித்து பேசியதை ஆடியோ மட்டும் இல்லாமல் ஒளிபரப்பியது. அதேசமயம், மாறன் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்து ஜெயலலிதா பேசியபோது அதை கட் செய்து விட்டது.

இது திமுகவினர் தரப்பில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா கூட்டத்தை ஜெயா டிவி கூட ஒளிபரப்பவில்லை. இந்த நிலையில் சன் டிவி அப்படியே ஒளிபரப்பியது, திமுகவை அப்பட்டமாக வம்புக்கிழுக்கும் செயல் என்று திமுகவின் முக்கிய தலைவர்கள் கட்சித் தலைமையிடம் குமுறியுள்ளனராம்.

வைகோ பேச்சும் லைவ் ...

இதுபோதாதென்று மதுரையில் நடந்த மதிமுக மண்டல மாநாட்டில் வைகோவின் பேச்சையும் சன் டிவி நேரடியாக ஒளிபரப்பியதால் இன்னும் கொதிப்படைந்துள்ளனர் திமுகவினர்.

இதுதவிர 18ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள தேமுதிக இளைஞர் அணி மாநாட்டையும் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பத் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு மேலும் பொறுக்கக் கூடாது, தயாநிதி மாறனை உடனடியாக திமுகவிலிருந்து நீக்க வேண்டும் என கருணாநிதிக்கு திமுக தரப்பிலிருந்து நெருக்குதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் கூட்டத்தை நேரடியாக சன் டிவி ஒளிபரப்பினால் அது மிகப் பெரிய அவமானம் என்றும் திமுக தரப்பில் கட்சித் தலைமைக்கு நெருக்குதல் தரப்பட்டு வருகிறதாம்.

தயாநிதி மாறனுக்கு தற்போது அமைச்சர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம், மகள் செல்வி ஆகியோர் ஆதரவாக உள்ளனர். இதன் காரணமாகவே இன்னும் தயாநிதி மாறன் திமுகவிலிருந்து நீக்கப்படாமல் உள்ளார். இருப்பினும் மு.க.அழகி மிகப் பெரும் எதிர்ப்பைக் காட்டி வருவதால், மாறன் குடும்பத்தினரால் கருணாநிதியை சந்திக்கக் கூட முடியவில்லை.

இந்த நிலையில் சன் டிவியின் செயல்பாடுகள் முதல்வரையே எரிச்சலுக்குள்ளாக்கியிருப்பதால் இந்தமுறை தயாநிதி மாறன் நீக்கப்படுவது உறுதி என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+