என்.கே.கே.பி. ராஜா மீதான ஆள்கடத்தல் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை: ஆள் கடத்தல், அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து நிலத்தைப் பறிக்க முயன்றது உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன் ஆகியோரை முன்னாள் அமைச்சர் ராஜாவின் ஆட்கள் கடத்தி, கொலை மிரட்டல் விடுத்து நிலத்தைப் பறிக்க முயன்றதாக பழனிச்சாமியின் உறவினர்கள் இளங்கோவன், சுந்தரமணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து ராஜாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், கடத்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானதால் ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
ஆனால் இதை எதிர்த்து பழனிச்சாமியும், குகமணியும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதில், கடத்தப்பட்ட சிவபாலன் இன்னும் ராஜாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளார். இந்த நிலையில்,இந்த வழக்கை பைசல் செய்தது சரியல்ல. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜாவின் ஆட்கள் 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இதையடுத்து இந்த 3 பேர் உள்பட முன்ஜாமீன் பெற்றிருந்த 7 பேரின் முன்ஜாமீனை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 39 பேர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இதை எதிர்த்தும் பழனிச்சாமி, குகமணி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ரகுபதி இன்று தீர்ப்பளித்தார். அப்போது 39 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ராஜா மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவிட்டார்.
ராஜாவைக் காப்பாற்ற காவல்துறையில் சிலர் தீவிரமாக முயன்றுள்ளனர். அவர்கள் யார் என்பதையும் சிபிசிஐடி போலீஸார் கண்டறிய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications