இசைக்கும்-இருளில் ஒளிரும்: கோ-ஆப்டெக்ஸின் நவீன பட்டுச் சேலை!
சென்னை: இசைக்கும் மற்றும் இருளில் சென்றால் ஒளிரும் வகையிலான நவீன ரக பட்டுச் சேலையை தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தீபாவளிக்காக இந்த புது வெரைட்டி பட்டுச் சேலையை கோ ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை தொடக்கவிழா மற்றும் நவீன வடிவமைப்புகள் கொண்ட சேலைகளின் அறிமுகவிழா நடைபெற்றது.
விழாவுக்கு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலர் விஷ்வநாத் ஷெகாவ்கர் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் ஆர்.ஜெயா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் எம்.பி.நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தீபாவளி விற்பனையை தொடங்கிவைத்தார். மேலும், நவீன வடிவமைப்புகளை அறிமுகம் செய்து, கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விளம்பரத்தையும் வெளியிட்டார்.
அதன்பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி விற்பனைக்காக விதவிதமான தீபம் படம் போட்ட பட்டுச்சேலையை அறிமுகம் செய்துள்ளோம். தனியார் கடைகளுடன் போட்டி போடும் விதமாக 1,500 புதிய ரக சேலைகளையும் அறிமுகம் செய்துள்ளோம்.
2 டிசைன்களில் ஒலி - ஒளி சேலை:
சிறப்பு அம்சமாக வண்ண, வண்ண மின்மினி விளக்குகளுடன், இசையை எழுப்பும் வண்ணப் பட்டுச்சேலையையும் அறிமுகம் செய்துள்ளோம். இதற்கு ஒலி-ஒளி சேலை என்று பெயரிட்டுள்ளோம்.
இந்த சேலையின் முந்தானை மற்றும் பார்டர்களில் மின்மினி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்மினி விளக்குகள் கொண்ட சேலையும் மற்றொன்று மின்மினி விளக்குகள், இசையை எழுப்பும் கருவி பொருத்திய சேலை என 2 வகையாக சேலைகளை வடிவமைத்துள்ளோம்.
இது பேட்டரியால் இயங்கும் தன்மை கொண்டது. பேட்டரியைப் போட்டால் இசைக்கும், ஒளிரும். மின்மினி விளக்கும், இசையும் தேவையில்லாத நேரத்தில் பேட்டரியை எடுத்து விடலாம். மேலும் சேலையை சலவை செய்யும்போதும் பேட்டரியை எடுத்து விடலாம்.
இந்த சேலையின் விலை ரூ.4,500 ஆகும். இந்த பட்டுச்சேலையை கட்டிச் சென்றால் இருட்டில் சென்றாலும் ஜொலிக்கலாம்.
தீபாவளி பண்டிகையையொட்டி ஜனவரி 31-ந்தேதிவரை பருத்தி மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், ரெடிமேடு (ஆயத்த) ஆடைகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்றார் ராமச்சந்திரன்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications