தர்மபுரியில் முகலாயர் தங்க நாணயங்கள் சிக்கின
தர்மபுரி: முகலாய சாம்ராஜ்யத்தை சேர்ந்ததாக சந்தேகப்படும் 131 தங்க நாணயங்களும், ஒரு ஜோடி தங்கத் தோடும் தர்மபுரி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் கல்குண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடு மாது (40). இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்த கணவனும், மனைவியும் அந்த இடத்தில் பள்ளம் தோண்டினர்.
அப்போது தங்க நாணயக் குவியல் இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்தனர். உடனடியாக அவற்றை வெளியே எடுத்தனர். மொத்தம் 131 தங்க நாணயங்களும், ஒரு ஜோடி தங்கத் தோடும் அதில் இருந்தன.
இதுகுறித்து பாலக்கோடு தாசில்தார் டியூக் பால்ராஜுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அதிகாரிகளுடன் விரைந்து வந்தார்.
நாணயங்களையும், தோடுகளையும் கைப்பற்றினார். நாணயங்களில் உருது எழுத்துக்கள் காணப்படுகின்றன. எனவே இவை முகலாய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாணயமும் தலா 6 கிராம் எடையில் உள்ளன. இந்த நாணயங்களையும், தோடுகளையும் இந்திய பொக்கிஷ சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த தாசில்தார் இவற்றை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார்.
-
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications