திமுக செயலர் கொலை-6 பாமகவினர் கைது
சென்னை: சென்னை அருகே வானகரத்தில் திமுக செயலாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாமகவைச் ேசர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வானகரம் ஓட மாநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேலாயுதம். இவர் தி.மு.க. மாவட்ட விவசாய பிரிவு செயலாளராக இருந்தார்.
வானகரம் ஊராட்சி அ.தி.மு.க. உறுப்பினர் பவானி இறந்ததை தொடர்ந்து அங்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க.சார்பில் கிருஷ்ணவேணி, பா.ம.க.சார்பில் சிவகாமி ஆகியோர் போட்டியிட்டனர்.
வானகரம் அரசு உயர் நிலைப்பள்ளி வாக்கு சாவடியில் ஓட்டுப்பதிவு நடந்தது. தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக சண்முக வேலாயுதம் தேர்தல் பணியில் ஈடுபட்டார்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் சண்முகவேலாயுதம் தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்தது. சண்முகவேலாயுதம் காரை நிறுத்தியதும் அவரை அக் கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது.
தலை, மார்பு, முகம் ஆகியவற்றில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
முதல் கட்ட விசாரணையில் சண்முக வேலாயுதத்துக்கும், பா.ம.க.வினருக்கும் ஏற்பட்ட தேர்தல் முன்விரோதம் காரணமாகவே கொலை நடந்தது தெரிய வந்தது.
'அகிம்சை' குமரேசன்:
இதையடுத்து வில்லிவாக்கம் ஒன்றிய பா.ம.க.செயலாளர் செல்வம், வானகரம் பஞ்சாயத்து தலைவர் சீனிவாசன், பாபு, ராஜாமணி, கேபிள் மதன், 'அகிம்சை' குமரேசன், அரிஹரன், சுரேஷ், சேகர், முருகன், திருஞானசம்பந்தம், சதீஷ், குமரேசன், ராஜா, பஷீர், மணி ஆகிய 16 பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications