மதுரை தேர்தல் வன்முறை: துணை மேயர், லீலாவதி கொலையாளி மீது வழக்கு
மதுரை: மதுரை மாநகராட்சியின் 52வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தல் வன்முறை தொடர்பாக துணை மேயர் பி.எம். மன்னன், லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவால் விடுதலையான மருது உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியின் 52வது வார்டுக்கு நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் வாக்குப்பதிவின்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. சரமாரியாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தேர்தலை எதிர்த்து அதிமுக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், முடிவை அறிவிக்க தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் வன்முறை தொடர்பாக துணை மேயர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துணை மேயர் மன்னன், கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, மருது, எஸ்ஸார் கோபி, மற்றும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல வடக்கு மண்டலத் தலைவர் இசக்கிமுத்து மற்றும் 10 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் மருது, சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரர்தான் எஸ்ஸார் கோபி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications